இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது. 5 டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. ஏற்கனவே பெர்த்தில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. முதல்நாள் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் மழையால் தடைபட்டது.
நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய வீரா்கள் ரன்களை குவித்தனர். நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்களை குவித்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் எஞ்சியிருந்த 3 விக்கெட்டுகளும் சாய்ந்தன. ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் குவித்தனர்.
அதைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில்அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து கில் 1, கோலி 3, பண்ட் 9 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ராகுல் 30, ரோகித் ரன் எடுக்காமலும் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் பகல் 12. 35 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இந்திய நேரப்படி இன்று மதியம் 1. 20 வரை ஆட்டம் நடைபெறும். மழை காரணமாக இந்த ஆட்டம் டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது. அல்லது ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
.