கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட சபாபதி நாடார் தெரு அருகில் தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் நகர் பகுதிக்கு செல்வதற்கு நடைபாலம் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இன்று நடைபாலம் நடுவே இடிந்து போனதால் அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை நகரத்திற்கு வருவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர். இவர்கள் வர வேண்டுமானால் காவிரி கரையோரம் வழியாக 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் பாலத்தை இடித்து அகலப்படுத்தி புதிய பாலம் கட்டி தர கோரிக்கை வைக்கின்றனர்.