Skip to content

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர் தாம் அணிந்திருந்த நகைகளை கழற்றி வீட்டின் டேபிளில் வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 4 கிராம் தோடு, 4 கிராம் மோதிரம், என 1 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து
புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவிசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!