ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு …
திருச்சி, ஸ்ரீரங்கம், அடைய வளஞ்சான் வீதி பகுதியைச் சேர்ந்தவர் எம் எஸ் கே கேசவன் (65) இவர் கடந்த 28 ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடந்தை சென்றார்.பின்னர் சில தினங்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து எம்எஸ்கே கேசவன் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி ஜிஎச்-ல் நோயாளி மாயம்..
திருச்சி மாவட்டம் மருங்காபுரி எம் கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (42) திருமணமாகாத இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.