திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அருகே உள்ள இலக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வினோதினிக்கும் அவரது கணவர் வீட்டாருக்கும் லோன் பெற்று கறவை மாடு வாங்கியதில் தகராறு ஏற்பட்டதால் . 2 பெண் குழந்தைகளை அழைத்துகொண்டுதாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.அதன் பின்னர் லோன் வாங்கிய கடனை அடைக்க தாய் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் வெங்கடேசன் கடந்த மாதம் மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று மனைவியின்
மண்டையை உடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் வெங்கடேசன் தனது மாமியார் மாது உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்டது போன்று ‘ஆழ்ந்த இரங்கல்’ என்ற தலைப்பில் பேனர் தயார் செய்து மனைவியின் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வினோதினிக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வினோதினி தன் கணவரால் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆபத்து உள்ளதாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய கந்திலி காவல் துறையினர் மனைவியின் மன்டையை உடைத்த வழக்கில் கணவர் வெங்கடேசனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.