Skip to content
Home » காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை

காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை

  • by Senthil

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த நூற்றாண்டின்  மிகச்சிறந்த திட்டமான முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதல்வர் விரிவுபடுத்தி உள்ளார்கள்.

இதன்மூலம் புதி்தாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 34,987  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள். 

22 லட்சம் மாணவர்களின் வயிற்றுப்பசியை போக்கி அவர்களின்  பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் ஸ்டாலின் அவர்களை  வணங்குகிறோம்.

இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.

சட்டமன்றத்தில்  தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த மகத்தான  திட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவுத்திட்டம்  எனும்  பெயர் சூட்ட வேண்டும்.

கடல் தாண்டி உலகம் முழுவதும் இந்த திட்டம் பரவவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!