Skip to content

கோவை ஏர்போட்டில் கைகலப்பு…. ஒப்பந்த ஊழியர்- டாக்ஸி டிரைவர் மோதல்…பரபரப்பு

கோவை, விமான நிலைய வளாகத்தில் பயணிகள் ஏற்றிச் செல்லும் இடத்தில் வாகனம் நிறுத்துவதில் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் – டாக்ஸி ஓட்டுனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் உடனடியாக தலையிட்டு சண்டையை விலக்கி இருவரையும் சமாதானம் செய்தனர். டாக்ஸிகளை விமான நிலையத்தில் அதிக நேரம் நிறுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது, டாக்ஸி ஓட்டுனரிடம்

ஒப்பந்த பணியாளர் டாக்ஸியை நீண்ட நேரம் நிறுத்தக் கூடாது என சொல்லியதால் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,….

வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!