Skip to content
Home » திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

  • by Senthil

திருச்சி அடுத்த வயலூரை சேர்ந்த ராஜேந்திரன்  என்பவரது மனைவி  ஜான்சிராணி(55).  இவர் நேற்று  காலை உறையூரில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு மகளுடன் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் ஜான்சிராணியும், அவரது மகளும் திருச்சி அரசு மருத்துவமனை அருகே வந்து அங்கிருந்து  வயலூர்  வழியாக செல்லும்  பஸ்சில் ஏறினர்.    ஊர் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி  வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஜான்சிராணி கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை காணவில்லை. பஸ்சில் ஏறும்போது கிடந்த செயினை  இறங்கும்போது காணவில்லை. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில்  யாரோ செயினை அபேஸ் செய்து விட்டனர். இது குறித்து ஜான்சிராணி,  சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!