திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கொல்லி மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் ஓம் சக்தி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று நாட்றம்பள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற புத்துக்கோவில் நாகலம்மன் கோவிலுக்கு தன்னுடைய இருசக்கர
வாகனத்தில் சுண்ணாம்பு குட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் காரணமாக விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற வாகனம் யாருடையது என்ற வண்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.