Skip to content

திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..

திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர் அப்போது முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகள்
விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 25), பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் ( 22 ) அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி
( 50 ) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 5,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சி குண்டூரை சேர்ந்த மருந்து கடையிலிருந்து போதை மாத்திரைகள் வாங்கி விற்பனை செய்ததாக வாக்குமூலம்
அளித்தனர். அதைத் தொடர்ந்து திருச்சி குண்டூர் எம்.ஐ.இ.டி 100 அடி சாலையில் மெடிக்கல் ஸ்டோர் நடத்திவரும் கோதண்டபாணி (33) என்பவரை கைது செய்தனர் .அவர் மருந்து கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 7000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. ஆக மொத்தம் இந்த போதை கடத்தல் கும்பல் இடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,…

இந்த மாத்திரைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் கோதண்டபாணி மருந்து சீட்டு இல்லாமல் இந்த போதை மாத்திரைகள் சப்ளை கும்பலுக்கு விற்பனை செய்துள்ளார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினர்.

error: Content is protected !!