அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மணப்பாறை ஆர்.வி. மகாலில் பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப. குமார் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர், சின்னசாமி, எஸ்.எம். பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பங்கேற்று இஸ்மாலாசிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, இணை செயலாளர் ரீனா செந்தில், துணை செயலாளர் சுபத்ரா தேவி, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயா, சாந்தி ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.