திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல், கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, கழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்பது குறித்து ஆய்வு கூட்டம் லால்குடி வடக்கு ஒன்றிய கழகம், அப்பாத்துறை,எசனகோறை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத்களில்.. நடைபெற்றது.
நிகழ்வில் நமது மாவட்ட பூத் பாக கிளை அமைக்கும் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை அவர்கள் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஆகியோர்.. பூத்களை ஆய்வு செய்து பூத் பாக கிளை பொறுப்பாளர்களை நியமித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிகழ்வில் லால்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் D. அசோகன் , மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் SM.பாலன்,மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM அருண் நேரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் , மாவட்ட தலைவர் FM. தாமஸ்ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயாபாபு, பரசுராமன், அம்மா பேரவை பாஸ்கரண், ராஜ்குமார் , ITதனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை கழக, நிர்வாகிகள், பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்