திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக்கூட்டம் திருச்சி, காட்டூர் RPG மஹாலில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்றனர். இந்த கூட்டம் குறித்து
மாவட்ட செயலாளர் ப. குமார் கூறும்போது, ‘எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்த்தல், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்த்தல், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது . தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகமாக பங்கேற்றனர்’ என்றார்.