தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என அந்த கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அந்த மாநாடு வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்கிறது. இதில் பூத் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரம் பூத் களுக்கும் பூத்துக்கு இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மாநாட்டின் நிறைவில் விஜய் பேசுவார். மாநாட்டில் மாநில நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது
- by Authour
