திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை ) நடந்தது.
வையம்பட்டிதெற்குஒன்றியம்புதுக்கோட்டை,நடுப்பட்டி,புதுவாடி,குமாரவாடி,ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டங்களில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக மேலிட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செ. செம்மலை, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பூத் கமிட்டி கள ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு செம்மலையும், ப. குமாரும் ஆலோசனை வழங்கினர்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர். R.சந்திரசேகர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட விவசாய அணி செயலாளர் C .சின்னசாமி , மாவட்ட கழகத் துணைச் செயலாளர் . N.பொன்னுசாமி , மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் . TM.முருகன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் Dr.இஸ்மாயில் , வையம்பட்டி தெற்கு ஒன்றியசெயலாளர் N.சேது, மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் N.அன்பரசன்
மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.