Skip to content

திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

  • by Authour

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நான்காம் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் சுமார் 60 புத்தக அரங்கங்களில் அரசியல் பொருளாதாரம் அறிவியல் மருத்துவம் சிறுகதைகள் நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல்வேறு எழுத்தாளர்கள் படைப்பாளிகளால் எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெற

இருக்கும் புத்தகத் திருவிழாவை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து காட்சிப்படுத்தப்படும் நிலையில் கடந்த வருடம் விற்பனையான புத்தக வசூலை விட இந்த வருடம் சுமார் ஒரு கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வசூல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!