புதுக்கோட்டை மன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. கலெக்டர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகளில வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ,எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை) , மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமிதமிழ்செல்வன், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.