தஞ்சையில் வரும் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கபட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது புத்தக ஸ்டால்கள் அமைக்கும் இடம் அறிவியல் அரங்கம் அமைக்கும் இடம், உணவு ஸ்டால்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.