நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்கியது. புத்தக திருவிழாவை குத்து விளக்கேற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் சதுர அடியில் 121 அரங்குகள் உருவாக்கப்பட்டு 50 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், வரலாறு, குழந்தைகளின் அறிவியல் கல்வி, போட்டித்தேர்வு புத்தகங்கள், தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரங்கை அமைச்சர் ரகுபதி திறந்து வைக்க முயன்றபோது கத்தரிக்கோல்
சரியாக வெட்டவில்லை. எனவே தாட்கோ தலைவர் மதிவாணன் இன்னொரு கத்திரிக்கோலை எடுத்து வந்து அமைச்சரிடம் கொடுத்தார். அதுவும் சரியாக வெட்டவில்லை. எனவே தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் எடுத்துகொடுத்த மூன்றாவது கத்தரிக்கோல் சரியாக வெட்டியதால் அரங்கம் கலகலக்க அமைச்சர் ரகுபதி ரிப்பனை வெட்டி புத்தக கண்காட்சியை திறந்தார்.