பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் மண்வெட்டியால் குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தினார். இப்பணியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு குளத்தினை தூய்மைப்படுத்தினர்.
