Skip to content
Home » விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

கல்வி நிறுவனங்கள்,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான கம்பெனிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  சம்பவம் சமீபகாலமாக   தொடர்கதையாக  நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து  மின்னஞ்சல் மூலம் மர்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று மட்டும்  ஏா் இந்தியா, விஸ்தாரா,  இண்டிகோ,  ஆகாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் அந்த விமானங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் இதுபோல 250க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் விமான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டதால்  விமான கம்பெனிகளுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!