தமிழக அரசின் தலைமைச்செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செயல்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பேசிவிட்டு துண்டித்துவிட்டான். அதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
