Skip to content
Home » தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

  • by Senthil

தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை சேர்த்தவர் கனகராஜ். இவரது மகன் விஷ்ணுகுமார் ( 23). இவர் அரியலூர் மாவட்டம் லால்குடி அருகே குமுழுர் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் எம் காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று பூதலூர் அருகே செல்லப்பன் பேட்டையில் உள்ள பெரியப்பா ஆசை தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று மதியம் ஆசைத் தம்பியும்,விஷ்ணு குமாரும் வயலுக்கு சென்று விட்டு செல்லப்பன் பேட்டை பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் நீரின் வேகத்தில்,விஷ்ணு குமாரும், ஆசைத்தம்பி இருவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் இன்று இருந்த பெண் ஒருவர் ஆசைத்தம்பியை தனது சேலையை கொடுத்து மீட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட விஷ்ணுகுமாரை பல மணி நேரம் தேடினர். இருப்பினும் விஷ்ணுகுமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே கிருஷ்ணகுமாரின் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,விஷ்ணு குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!