தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் குளத்தில் பிணமாக மிதந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இறந்தவர் வடக்கு வாசல் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்த இருதயம் என்பவரின் மகன் அருள் (37) என்பதும், இவர் 2009ம் ஆண்டு முதல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வருவதாகவும், குடிப்பழக்கம் இருந்து வருவதால் இவருக்கு வலிப்பு நோயும் இருப்பதாகவும் தெரியவந்தது. கடந்த 16ஆம் தேதி முதல் அருளை காணவில்லை என அவரது பெற்றோர் தேடி வந்துள்ளனர். இதனால் அருள் கால் தவறி குளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.