2015ல் வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
அப்படத்தில் ரம்யாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரீச் ஆகாததால் பெரும்பாலானோர் அவரை நோட் பண்ண தவறிவிட்டனர்.
அப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து தனது முழு நடிப்பு திறனை வெளிக்காட்டி மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். ஜோக்கர் படத்தில் ரம்யாவின் நடிப்பு பலரையும் ஈர்த்தது, பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டினர்.
தொடர்ந்து ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம் பக்கம் திரும்பினார். மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.