அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு, காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக ‘புளூஸ்டார்’ உருவாகியிருக்கிறது. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. படத்திற்காக அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் மாறிவிட்டார்கள்.”

”படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் அற்புதமாக அமைத்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் இந்த படத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை சுற்றி கதை இருப்பதால் ஒளிப்பதிவுக்கென்று மெனக்கெட்டிருக்கிறார். இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும். ஜனவரி 25 தியேட்டரில் படம் வெளியாவதாக” இயக்குநர் ஜெய்குமார் கூறியுள்ளார்.