தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், தஞ்சாவூர் இராஜா மிராசுதார் மருத்துவமனை இணைந்து பாபநாசம் அடுத்த ராஜகிரியில் இரத்த தான முகாமை நடத்தின. இரத்த தான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணிச் செயலர் வரிசை முஹம்மது தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாபநாசம் தாசில்தார் செந்தில் குமார் பங்கேற்று, முகாமைத் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் இராஜா மிராசுதார் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 15 பேரிடமிருந்து இரத்தத்தை சேகரித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் செல்லப்பா உட்பட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தஞ்சை அருகே இரத்த தான முகாம்..
- by Authour