தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் முதல்வர் மு.கஸடாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம் நடந்தது. வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏவும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்.ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், தஞ்சை தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான அருளானந்தசாமி, வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், சமுதாய சுகாதார செவிலியர் ரேணுகா, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் ரத்ததானம் செய்தவர்களிடம் இருந்து தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அலுவலர் காயத்ரி மற்றும் செவிலியர்கள் ரத்தத்தை சேகரித்தனர். இம்முகாமில் 70 பேர் ரத்ததானம் செய்தனர். வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய பல் டாக்டர் அபிராமி நன்றி கூறினார்.
முகாம் குறித்து வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் கூறுகையில், இந்த முகாமில் தன்னார்வலர்கள் அளித்த ரத்தம் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரசவத்திற்காக வரும் தாய்மார்களுக்கும், குழந்தையை பிரசவித்த தாய்மார்களுக்கும் அவசர அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பிற்கு ஈடு செய்யவும், அனீமியா என்ற ரத்த சோகைக்கு கர்ப்ப காலத்தில் சிகிச்சை அளிக்கவும் உரிய நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணி தாய்மார்கள் நலன் கருதி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தகுதி உள்ள தன்னார்வலர்கள் ரத்ததானம் அளிக்க முன் வர வேண்டும்.
என்றார்.