புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி, மற்றும் 34வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் 25 குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அரசு மருத்துவக் கல்லூரி செமினார் ஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் பி.அசோகன் தலைமையேற்று வரவேற்றார். ரோட்டரி சங்கச் செயலாளர் முத்தன் அரசகுமார், ரோட்டரி பிரார்த்தனை வாசித்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் ஜெ.ராஜா முஹம்மது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஜிஏ.ராஜ் மோகன், இருக்கை மருத்துவர் ஏ.இந்திராணி ,மருத்துவ கண்காணிப்பாளர் வி.தையல்நாயகி முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாருதி .மோகன்ராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், பல மாவட்டங்களிலும் சிறப்பாக பல கர்ப்பிணி பெண்களுக்கும், விபத்தில் காயமடைந்தவர் களுக்கும், ரத்தம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும், விஷக்கடி உள்ளவர்களுக்கும், பல்வேறு விதமான உடல் நலமற்ற குழந்தைகளுக்கும்,ரத்தம் கொடுத்தும், ரத்தம் ஏற்பாடு செய்த 25 பேரை பாராட்டி குருதி கொடையாளர் விருதினை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.மணி வழங்கினார். அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். விருது பெறும் நிகழ்ச்சியில் 167 முறை ரத்தம் கொடுத்த பெரியார் ரத்ததானக்கழக தலைவர் கண்ணன்மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க ளுக்கு ரத்தம் ஏற்பாடு செய்தவருக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்ஏஎஸ்..சேட் என்ற அப்துல் ரகுமான், பொருளாளர் ஆர்.சங்கர், சேது கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.