சென்னையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதை பயன்படுத்தி சிலர் கிரிக்கெட் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு கள்ளசந்தையில் விற்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் மைதானம் அருகே கள்ளசந்தையில் டிக்கெட் விற்ற 12 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 29 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.