Skip to content

விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  காரியாப்பட்டியில்  ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை  பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில்  வெடிமருந்துகள்  எதிர்பாராமல் வெடித்து சிதறியது.  வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள் இதில் சேதமானது. அந்த வாகனங்களில் இருந்த வெடிமருந்துகளும் தொடர்ந்து  பயங்கர சத்தத்துடன்  வெடித்து சிதறிக்கொண்டே இருந்தது.

இந்த  விபத்தில் 4 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மேலும் பலர்  உடல் கருகினர்.  இந்த வெடிவிபத்து சத்ததம் 20 கி.மீ. சுற்றளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு  தீயணைப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

தகவல் அறிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  நிவாரணப்பணிகளை முடுக்கிவிட்ட  முதல்வர் ஸ்டாலின், பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் போனில் விசாரணை நடத்தி்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!