திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் அரியலூர் மாவட்டத்தில் திமுகவினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில், உதயநிதியின் 48-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், 200 ஏழை மக்களுக்கு போர்வை, இனிப்புகளை வழங்கினர். மேலும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுகவின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் 200 பேருக்கு போர்வை, பிரியாணி…
- by Authour
