கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்பட சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் படி, மலையாள சினிமாவில் 225 கோடி ரூபாய்க்கு, கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வருமானவரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலையாள படங்களை வெளிநாடுகளுக்கு விநியோகித்ததன் மூலமும் பெரும் மோசடி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்தும் வருமானவரித் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.