திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், இவர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருச்சி தில்லைநகரில் ஒரு பேனர் வைத்து உள்ளார். அதில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தில் எடப்பாடியின் முகத்தில் கருப்பு மை பூசப்பட்டு உள்ளது.இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.