தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அதே நேரத்தில் கவர்னர் மாளிகையில் மாணவர்களை அழைத்து, தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதாகவும், குற்றம் சாட்டி எதிர்க்கட்சியினர் கவர்னர் ரவியை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று கவர்னர் ரவி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதற்காக தஞ்சை வந்த கவர்னரை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புகொடியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து முழக்கங்கள் எழுப்பினர். கவர்னரே திரும்பி போ என்று அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர்.