பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் சந்தனகூடு விழா நடந்து வருகிறது.. இதில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கவர்னரை, கலெக்டர் பிரதீப் குமார் உள்பட அதிகாரிகள் பலர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் கவர்னர் நாகூர் புறப்பட்டு சென்றார்.
நாகூர் செல்லும் வழியில் திருவாரூர் மாவட்டத்தில் கவர்னருக்கு கருப்புகாட்ட காட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர். அவர்களை கவர்னர் வருவதற்கு முன்னரே போலீசார் கைது செய்தனர்.30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்ட எல்லையில் கீழ்வேளூர் புறவழிசாலையில் காங்கிரஸ், விசிக ,கம்யூனிஸ்ட், திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.