Skip to content
Home » ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.3.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட தீர்மானங்களின்படி,  திமுகவில்  மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.

முதல்வர்  அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்” நடத்திட முடிவெடுக்கப்பட்டு, முதலாவதாக கடந்த ஜூலை 26 அன்று திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து;

தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற 17-8-2023 (வியாழக்கிழமை) அன்று ராமநாதபுரம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூர் என்ற இடத்தில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.

தென் மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 19 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தத்தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) கூட்டத்தை’ கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

1. ராமநாதபுரம்

2. சிவகங்கை

3. திண்டுக்கல் கிழக்கு

4. திண்டுக்கல் மேற்கு

5. தேனி வடக்கு

6. தேனி தெற்கு

7. மதுரை மாநகர்

8. மதுரை வடக்கு

9. மதுரை தெற்கு

10. விருதுநகர் வடக்கு

11. விருதுநகர் தெற்கு

12. திருநெல்வேலி கிழக்கு

13. திருநெல்வேலி மத்திய

14. தென்காசி வடக்கு

15. தென்காசி தெற்கு

16. தூத்துக்குடி வடக்கு

17. தூத்துக்குடி தெற்கு

18. கன்னியாகுமரி கிழக்கு

19. கன்னியாகுமரி

மேற்கண்ட தகவலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!