Skip to content

உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். அவர் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், பைசாபாத் தொகுதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கும் சமாஜ்வாதிக்கும் கடும் போட்டி நிலவியது. சமாஜ்வாதி சார்பில், எம்.பி., அவதேஷ் பிரசாத்தின் மகன் அஜித் பிரசாத் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் சந்திரபானு பஸ்வான் போட்டியிட்டார்.மொத்தம் 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. மொத்தம் 30 சுற்றுகளாக எண்ணப்பட்ட இந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், பா.ஜ., வேட்பாளர் சந்திர பானு பஸ்வான் 1,46,397 ஓட்டுக்களை பெற்று வென்றார். சமாஜ்வாதி வேட்பாளர் 84,687 ஓட்டுக்கள் பெற்றார். இதன்மூலம், 61,710 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது.

error: Content is protected !!