Skip to content

டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பன்சூரி ஸ்வராஜ், பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, பாஜகவின் தேசியச் செயலரான துஷ்யந்த் கவுதம், எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா.பாஜகவின் சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். கட்சியின் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டவர். இவர் முதல்வராக அதிக வாய்ப்புள்ளது. டெல்லியின் செயல் தலைவராக 2022-ம் ஆண்டு முதல் இருந்து வந்த வீரேந்திர சச்தேவா கடந்த 2023-ல் டெல்லி பாஜக தலைவராக பொறுப்பேற்றார். டெல்லி முன்னாள் முதல்வர் சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி ஸ்வராஜ், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். வழக்கறிஞரான இவர், டெல்லி பாஜக சட்டப்பிரிவு மையத்தின் தலைவராக கடந்த 2023-ல் நியமனம் செய்யப்பட்டார். துஷ்யந்த் கவுதம் பாஜகவின் தேசியச் செயலராக இருக்கிறார். முதல்வர் பதவியின் மீது இவரும் ஒரு கண் வைத்துள்ளார். மனோஜ் திவாரி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். டெல்லியில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கிறார். இவரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்.

error: Content is protected !!