மக்களவையில் நேற்று வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சியினர் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சபைக்கு வந்தனர்.
சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், வக்பு வாரிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். இதையொட்டி அவர் ஒரு உறுதிமொழி வாசித்தார். அதை திமுக உறுப்பினர்கள் திரும்ப கூறி உறுதி ஏற்றனர்.
இந்த நிலையில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். இதனை மத ரீதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறினார்.