Skip to content

பாஜகவை விட்டு விலகும் நடிகை விஜயசாந்தி…..

  • by Authour

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிஆர்எஸ் குடும்ப ஆட்சியில் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரசில் போராட வேண்டும். 7 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்காக போராடியவர் ராமுலம்மா என்று சிலர் சொல்கிறார்கள். மறுபுறம், 1998 முதல் ஒரு அரசியல் தலைவராக பாஜகவை நம்பி, தென்னிந்தியாவிலும் பல மாநிலங்களிலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றி தெளிவான இந்துத்துவவாதியாக பாஜகவுடன் நிற்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

உண்மையில், தெலுங்கானாவில் கொடுங்கோள் கே.சி.ஆரின் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து போராடி பெற்ற தெலங்கானா  மாநிலத்தின் நன்மைக்காக மட்டுமே. எனது சினிமாவில் இரட்டை வேடங்களில் நடித்த போலீஸ் லாக்கப், ரவுடி தர்பார், நாயுடம்மாவின் லெக்கா போன்று  அரசியலில் சாத்தியமில்லை. எதாவது ஒரு கட்சியில் மட்டுமே செயல்பட முடியும். ஹர ஹர மஹாதேவா…. ஜெய் ஸ்ரீராம்…. ஜெய் தெலுங்கானா” என பதிவு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைவர்கள் தெலுங்கானாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் விஜய்சாந்தி அவர்களுடன் இணக்கமாக பழகாமல் கூட்டங்களிலும் பங்கேற்பதை தவித்து வருகிறார்.  தெலுங்கானாவில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக வெளியிட்ட பட்டியலில் விஜயசாந்தி பெயர் இதுவரை இடம் பெறவில்லை. அவ்வாறு உள்ள நிலையில் விஜய் சாந்தி எக்ஸ் பதிவு விரைவில் காங்கிரஸில் இணைவார் என தெலுங்கானா அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!