Skip to content
Home » பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது…மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது…மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷஃபிக் அகமது, சுல்பிகர் அலி, ஹஸ்ஸான் பைஜி, முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டட்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சித் திட்டம், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சியின் திட்டமிடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையில்லை என கூறிய நிலையில், 22வது சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14ல் பொதுசிவில் சட்டம் குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி வரை தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவும் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒரேகுரலில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என மொத்தம் 4 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியது.. தமிழ்நாட்டில் பதிவுத்துறையால் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கான சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த கட்டண உயர்வு என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. தான செட்டில்மெண்ட், தனி மனை பதிவிற்கான கட்டணம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இதனால் வீடு, மனைகளின் விலை அதிகரிக்கும். ஆகவே, தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ள ஆவணப் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கான சேவை கட்டணங்களை குறைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மகளிர் உரிமைத் தொகையான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த உரிமைத் தொகையை பெறுவதற்கு தமிழக அரசால் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தைனைகளானது தேவையுடைய பல பெண்களுக்கு உரிமைத் தொகையை மறுக்கும் வகையில் உள்ளது. ஆகவே, ஆண்டுவருமானம், விவசாய நிலம்  உள்ளிட்ட நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். கர்நாடகவில் மேகதாதுவில் அணைகட்ட ஒருபோதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அனுமதிக்காது. பாஜவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் எழுச்சி உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!