பாஜகவின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக செயல்படுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவால் பதவி பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டிகளாக உள்ளதாகவும், ஒரு வதந்தியை வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் பரவச் செய்து அதை உண்மை போல ஆக்கும் பணியை பாஜக செய்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.