Skip to content

ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு

தமிழக பாஜ சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் ஒருங்கிணைப்பாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பதற்காக தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்பட 30 பேரின் பட்டியலை பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்நிலையில் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் வகையில் மேலும் 9 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது, மாநில துணைத் தலைவர் பி.டால்பின், ஸ்ரீதர், மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம், துணைத் தலைவர் டாக்டர் கனகசபாபதி, தேசிய மின் நூலகத்துறை பொறுப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் எம்.நாச்சியப்பன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் டி.வரதராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

இந்த தகவலை அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *