கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளாத அக்கட்சி நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கில் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
கோவை, குமரபுரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூப்பரவைசராக பணியாற்றி வருகிறார்..இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக மாநில செயற்குழு உறப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பாஜக தலைவர் உமாசங்கர் ஆகியோரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் இவர்கள் இருவரும் விஸ்வநாதனின் நடவடிக்கை சரியில்லாதமையால் பாஜக வில் இணைக்காமல் இருந்துள்ளனர்..இதுதொடர்பாக விஸ்வநாதன் தொடர்ந்து இவர்களிடம் கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது..இதனிடையே சனிக்கிழமை இரவு விஸ்வநாதன் தனது வீட்டில் இவர் மீது இவரே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துள்ளார்.. அதன்பின் இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளான சதீஷ்குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார்.. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் நடத்திய விசாரணையில் உமாசங்கர், சதீஷ்குமார் ஆகியோர் மீது கொண்ட காழ்புணர்ச்சி காரணமாக அவர்களை கொலை முயற்சி வழக்கில் சிக்க வைத்து பழிவாங்கும் நோக்கில் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து கொண்டு அதனை பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது.. காவல்துறையினரின் விசாரணையில் இதனை விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார்..இதையடுத்து அவரை மேட்டுப்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.