விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரூர் தான்தோன்றிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் மாநில தலைவர் தடா பெரியசாமி திருவாரூர் பாஜக பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதை கண்டிக்கும் வகையில் கரூர் மாவட்ட பொருளாளர் சதீஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக நிர்வாகி தடா பெரியசாமி படத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிழித்து காலால் மிதித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தால்
அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.