திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கான பதவி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்று பதவி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்….
காங்கிரஸ் கட்சியில் பலர் தேர்தலில் நிற்க வேண்டும் என நினைப்பது தவறு இல்லை ஒரு தொகுதியில் நிறைய பேர் இடம் கேட்டல் கட்சி வளர்ச்சி அடைந்து உள்ளது என அர்த்தம்.
இந்தியா கூட்டணியில் திருச்சியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.
தற்போது வரை கூட்டணி எண்ணிக்கையில் இடம் ஒருக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆனால் எந்த தொகுதிகள் என முடிவு செய்ய வில்லை. மோடி சிலிண்டர் விலை இன்னும் 500 ரூபாய் குறித்து இருக்கலாம் தேர்தலுக்கு பின்பு அவர்களால் குறைக்கு முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு கேஸ் விலை 200 , 100 குறைக்கும். மோடி ஏற்கனவே நான்கு ஐந்து முறை தமிழ் நாட்டிக்கரு வந்து விட்டார் இன்னும் 40 , 50 முறை வந்தாலும் பிஜேபி-க்கு மாற்றம் வர போறது இல்லை.
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டு உள்ளது வேறு கட்சியுடன் பேச்சு வார்த்தையில் உள்ளது என்பது தவறான தகவல் அதை மாநில தலைவர் மறுத்து விட்டார் என்றார்.