மகாராஷ்டிரா மாநிலம் புனே மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. கிரிஷ் பாலசந்திர பபத்(74) இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பபத் இறந்தார். இவர் 2019 மக்களவை தேர்தலில் புனே தொகுதியில் 6,32,835 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மோகன் ஜோஷி 3,08,207 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.