உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா தொகுதி பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியா. இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவரான இவர் மீது குற்றவழக்கு உள்ளது. 2011ம் ஆண்டு தனியார் மின் நிறுவன ஊழியரை தாக்கியதாக ஆக்ரா போலீஸ் நிலையத்தில் ராம்சங்கர் கதேரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆக்ரா சிறப்பு கோர்ட்டில் பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பாஜக எம்.பி. ராம்சங்கர் குற்றவாளி என கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. குற்றவாளி என ஆக்ரா கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராம்சங்கர் தெரிவித்துள்ளார். அதேவேளை, குற்றவழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராம்சங்கரின் எம்.பி. பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும், பறிக்கப்பட்ட எம்.பி. பதவி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை…
- by Authour
