என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் 151 வது தொகுதியாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மயிலாடுதுறை குத்தாலம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் :
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :…
என் மண் என் மக்கள் நிறைவு நிகழ்ச்சிக்கு பிரதமர் வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் அதற்காக வேண்டுகோள் விடுத்துள்ளோம். பிரதமர் வருவது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால் நிச்சயம் அறிவிப்போம்.
கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும் அவர் கட்சியில் வகிக்க கூடிய பொறுப்புக்கும் வார்த்தைக்கும் சம்மதம் இல்லை.
கே.பி முனுசாமிக்கு அண்ணாமலை மீது தான் வன்மம் அதுவும் அவருடைய தொகுதிக்கு சென்று வந்த பின்பு வன்மம் அதிகமாகி விட்டது. அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்ஜிஆர் இருந்தது போல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் இருந்தது போல் பாஜகவிற்கு ஒரே ஒரு மோடி தான். அண்ணாமலையை போல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆனால் மோடியை போல் இன்னொருவரை உருவாக்க முடியாது. அதை கே.பி.முனுசாமி புரிந்து கொண்டு பேச வேண்டும்.
என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் மீது வன்மம் தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டே கட்சி தான் இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நாங்கள் அவர்கள் இருவருமே தோல்வி அடைந்தவர்கள் என்பதை கூறி வருகிறோம். தி.மு.க, அ.தி.மு.க விற்கு இடையே யார் பெரியவர்கள் என்கிற பங்காளி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மீது கோபம் இருக்கிறது என்பதை விட அண்ணாமலை மீது தனிப்பட்ட வன்மம் இருக்கிறது. சேலம் இளைஞரணி திமுக மாநாடு நமத்து போன மிச்சர் போல் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி எங்களுடையது. அந்த கூட்டணியை உருவாக்கியது நாங்கள் தான். இந்த கூட்டணியில் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் வரலா